” இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “

“ இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “கவி…ரஜனி அன்ரன் (B.A) 13.03.2025

சிந்தனைப்பட்டறை செம்மொழிக்காவலர்
நாவலர் மரபில்வந்த ஞானக்களஞ்சியர்
மட்டுவில் மண்ணில் உதித்தமகான்
இலக்கியவழி இருநாடகமென தந்த
உயர்தர பாடத்திட்டத்தின் ஆசான்
ஆசான்களுக்கெல்லாம் ஆசான் பேராசான் !

ஆசான் ஆக்கிய நூல்களெல்லாம்
அருந்தமிழுக்கு விருந்தாகி
எழுத்திலே புதுமை நடையிலே காத்திரமாய்
சொல்லுக்குப் பொருளுரைப்பார் கச்சிதமாய்
வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தமிழுக்காய் !

அள்ளஅள்ளக் குறையாத அறிவுச்சுரங்கம்
தெள்ளுதமிழ் நீரோடை செந்தமிழின் பாவலன்
அரைநூற்றாண்டுகள் தமிழோடு பயணித்து
பங்குனித்திங்கள் பதின்மூன்றிலே மறைந்தாரே
பண்டிதமணி ஐயாவிற்கு யாழ்வளாகமும்
பண்போடு கலாநிதிப் பட்டத்தினையும் வழங்கி
பண்பாடு காத்து நின்றதே !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading