இளையவர் உலகம்

ரஜனி அன்ரன் (B.A) “ இளையவர் உலகம் “ 14.08.2025

இளையவர் உலகம் தனியுலகம்
இனிமை நிறைந்த பொன்னுலகம்
நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்கள்
நாளைய உலகையாழும் வித்துக்கள்
நாட்டின் எதிர்காலமே இளையவர் கைகளில்தான் !

வலிமைக்கும் உரத்திற்கும் உரித்தானவர்
வாழ்க்கைத் தரத்திற்கும் உயிர்ப்பானவர்
வெற்றியை நிலைநாட்ட விருப்பானவர்
இலக்கினை நோக்கியே இமயமாய் எழுந்திடுவர்
இளையவர்களுக்காக அர்ப்பணமாக்கியதே ஐ.நா.மன்றும்
இளையோர் சிறப்புநாளாக ஆகஸ்ட் பன்னிரெண்டாம் நாளை !

இளையோரின் ஆற்றலும்அறிவும் அர்ப்பணிப்பும்
ஆளுமையை நிலைநாட்டும்
பொறுப்புக்களை நிருவகிக்கும்
தன்னம்பிக்கை உணர்வினை ஊட்டி
தன்னிறைவை உண்டாக்கும்
நாட்டின் வளர்ச்சிக்கு ஆணிவேராகி
நாட்டின் சரித்திரத்தையே மாற்றிடுவர்
இளையவர் உலகம் தனியுலகே !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading