நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-38
17-10-2024

உதிர்கின்ற இலைகளே

உதிர்கின்ற இலைகளே
உதிரத்தில் இனம்
புரியா வலியும் சோகமும்
உதிர்ந்து போன உறவுகளா?
உதிர்ந்து கொண்டிருக்கும்
உறவுகளா? நினைவுகளா?
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
உன் புகழ் உலகறியும்!

இலைகள் உதிர்ந்தாலும்
மரங்கள் வாடுவது இல்லை
மீண்டும் புதிய இலை..
வாழ்வும் உணர்த்துகிறது
கணவனை பிரிந்து
வாடி வதங்கினாலும்
வலியற்று மீண்டு வா நீ
வாழ்வுண்டு உனக்கும்.

பச்சைக் கம்பளமாய்
பசும் சோலையாய்
பச்சையம் பலனளித்து
பலவாய் வாழ்ந்த நீ
வீழ்ந்து நீ சருகாவதும்
மிதந்து நீ எறும்புக்கு
ஒடமாவதும் கதையாகிடாமல்
வாழ்ந்து நாமும் காட்டுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

Continue reading