ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..

வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற சன்றைஸ் முதலொலி வாழி
முடக்கமும் போரும் தாயக வாழ்வில் தவிப்புடன் உறவுகள் புலம்பெயர் நாட்டில்
தொலைத்தொடர்புகளற்ற காலத்தின் கடினம் நள்ளிரவு பதினொருமணிக்கு நம்தமிழ் ஒலிக்கும் ஒரேயொரு ஊடகம் சன்றைஸ் ஆவலும் தவிப்பும் மனதினில் தீயாய் அடங்குமே செய்தியின் பகிர்வால்
செய்தி சேகரிப்பே அன்றைய பொழுதில் அபாயத்தின் வழி தாயகத் தவிப்பை தவிர்த்ததே சன்றைஸ்
அன்றைய வரமாய் முதலொலி
முகிழ்ப்பு இன்றும் தொடரும்
முனைப்பின்வலுவே மறக்கத்தகுமாசன்றைஸ்முதலொலிநன்றி.

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading