ஓ கார்த்திகையே!

நகுலா சிவநாதன்
ஓ கார்த்திகையே!

பனித்துளி புவியை நிரப்பிட
தனித்துளியாய் பாரை நிறைத்திடும்
கார்த்திகை திங்களே!

காரிருள் வானில் படர
கண்களில் குளிர்வு பெருக
மண்ணிலே மலரும் கார்த்திகைப்பூவே!
பூத்திருக்கிறாய் புனிதம் மேவ!

முருகன் புகழ்பாடும் கார்த்திகை
எங்கள் புனிதர் புகழ்பாடும் மாதமே
கார்த்திகை பூத்தாய் காரிருள் களைந்தாய்
நேர்த்தியாய் உன் கடமை ஆற்றுகிறாய்

ஓ கார்த்திகையே பூக்கிறாயா?
சாரல் மழையிலும் சாதிக்க துடிக்கிறோம்
மடிந்தவர்கள் வரவில்லை
விடியும் பொழுதுகளை கேட்கிறோம்
விந்தை உலகே விடிவு தருவாயா?
ஓ கார்த்திகையே பூக்கிறாயா?

நகுலா சிவநாதன் 1830

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading