ஔவை

எல்லாம் இன்ப மயம்
————————————–
அன்பொன்றை ஆயுதமாய்
கொண்டு வாழ்ந்தால்
அகிலத்தில் துன்பங்கள்
என்றும் இல்லை
அணைக்கின்ற சொந்தங்கள்
எங்கும் உண்டேல்
அழிகின்ற உயிரினங்கள்
ஏது மண்ணில்

வன்மங்கள் என்றொன்று
வழக்கில் வேண்டாம்
வழிகாட்டத் தொழினுட்பம்
வரவும் வேண்டாம்
வாய்க்காலும் வரப்புகளும்
வசந்தம் வீசும்
வாய்ப்பேச்சில் அத்தனையும்
அழகாய்ச் சொல்லும்

இன்பத்தைத் தருகின்ற
இயற்கை ஒன்றே
இயல்பாக இருக்கின்ற
உண்மை அன்பு
ஈகின்ற அத்தனையும்
உலகில் செல்வம்
அதைமறந்து அழிக்கின்ற
எண்ணம் வேண்டாம்

மின்னுகின்ற அழகுகளோ
எல்லை இல்லை
கண்ணிரண்டு போதாது
காட்சி காண
மண்ணுலகில் இன்பத்தில்
மனிதர் வாழ
மற்றொன்று வேண்டாமே
இயற்கை போதும்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading