கணப்பொழுதில்……..

இரா.விஜயகௌரி
கணப்பொழுதில் விரைந்தெழுந்து
கரைந்தெழுதும். வாழ்வு- இங்கு
வினைப்பயனோ வினைத்திறனோ
அறிவறியாப் பொழுது்

கனத்தெழுதும் வாழ்வின் நொடி
கனவெனவே கலையும் -இங்கு
நிலையில்லா. இவ்வாழ்வினுக்கா-எம்
குழி பறிக்கும் கூட்டம்

ஆய்ந்தறிய முடியாத ஆய்வரங்கு
அழுதேதான் புரண்டாலும் மீளாத
உயிர் வதையின் ரணங்கள்
புரியாமல் ஓடுகின்றோம் புதைகின்றோம்

அழித்தெழுதி அனலெழுதி
சிதைத்தழித்து சீர்குலைத்து
மனம் வதைத்து. குணம் சிதைத்து
ஏன் ஏனின்னுமெங்கள் வாழ்வு

புரியாத மானுடனே இங்கு
நிலையில்லை. வாழ்வு
தினம் மனங்களிலே. வாழ்வு சமை
நிலை கொள்ள. வாழ்வாய்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading