கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
நாடே என் நாடே

ஆத்தோரம் தூண்டிவிட்டு ஆனந்தமாய் மீன் பிடித்து
தோப்போரம் கூட்டாஞ்சோறு தோழியோடு உண்டதையும்

வயலிறங்கி நண்டுபிடிக்க வரப்பினிலே விழுந்தெழுந்து
முயலுகுட்டி புதருக்குள்ள மயில்முட்டை கையிலேந்தி

காட்டோரம் மரங்களிலே கனி வகைகள் பலவும் உண்டு
வீட்டோரம் முற்றத்திலே விளையாடி மகிழ்ந்தோமே

விவசாய தோட்டத்திலே விரட்டிய காககுருவி கவலை மறந்து
கதைகள் பேசி காணியிலே ஊர்வலமே

வெள்ளை சீருடையில்
வெள்ளி் நகைப்புடனே பள்ளி சென்றுநானும் பயின்றதை மறவேனோ

சொந்தநிலம் என்று
சொட்டும் உரிமையில்லை பந்தமென்ற உறவுமில்லை பகைமையின்றி
பாவியானோம்

நெஞ்சோடு நின்றாடும் நினைவினை இழப்பேனோ
தஞ்சம்தந்த தாயகமே தாய்நாடும் சுகமன்றோ

🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻👏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading