மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

கீத்தா பரமானந்தன்

அத்திவாரம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!

சித்திகளை நிறைத்திடும்
சீர்தானே அத்திவாரம்!
பத்திரமாய் நிலைத்திடவும்
பரிமளித்துச் செழித்திடவும்
முத்தெனவே பதியமிடும்
முத்திரையாம் அத்திவாரம்!
பலமாகும் அத்திவாரம்
படையலிடும் சரிதங்களை!

பூமியிலே உயிராகப்
பெற்றோர்கள் அத்திவாரம்!
சாமியாக நின்றிட்ட
சந்தணத்தின் சுவாசங்கள்!
நித்தியத்தின் வளர்ச்சியிலே
நிழலாகும் துணையாக
நாள்பார்த்துக் கோள்பார்த்து
நல்கிய சம்சாரம்!

ஆழமுடை அடிக்கல்லாய்
ஆனந்தத்தின் படிக்கல்லாய்
வாழ்வினைத் தோப்பாக்கி
வம்சத்தின் காப்பாக
வரைவான அத்திவாரம்!
ஆயுளின் அத்தியாயம்
ஆட்டமின்றி நகர்த்திட
ஆண்டவன் போடுவான்
அனைத்துக்கும் அத்திவாரம்!

கீத்தா பரமானந்தன்
08-07-24

ப்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading