கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்குனி
————
பங்குனி மாதம் அம்மனுக்கு
உகந்தது
பங்குனி வந்தாலே பகல் வெளிக்க
ஆரம்பிக்கும்
பட்ட மரங்கள் துளிர்க்கும்
பசுமை மெல்ல த் தொடங்கும்
இருட்டும் கொஞ்சம் குறைய
மனமும் கவஞ்சம் தெளிய
வயலும் விதைக்கத் தொடங்க
குளிரும் இருக்கும் ஆனால்
குந்தகம் அதிகம் இராது
பங்குனித் திங்கள் பக்தியுடன்
விரதம் இருந்து
நல்வரம் பெற்று நலமாக வாழ
இயல்பு மாந்தர் இன்புற என்றும்
பங்குனியே வா!
பகலவனைக் காட்டியே
பாதைதனை திறந்து விடு!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading