சக்தி சிறினிசங்கர்

சூரவதை
***********
கந்தன் என்றும் கடம்பன் என்றும்
வந்தனரே தேவர்கள்
வரம்கொடுத்து நின்றாய்!
முந்திய விதியாலே
தந்திரமாய் ஆண்டுகொண்டு
தொந்தரவு தந்துநின்ற
அசுரர்ளை அழித்திட
ஏனையா வரவில்லை முரூகையா?
வதைபட்டோம் வாழ்வைத் தொலைத்தோம்
சிதைந்து போன உயிர்கள் ஏராளம்!
கார்த்திகை வந்தாலே
காந்தள்பூ சொல்லும்
பேரவலம்
தூரம் வந்துவிட்டோம்
தூர்ந்து போகுமா
நினைவுகள்
சூரவதைபட்ட மண்ணின் மைந்தரை
ஆரத் தழுவி அஞ்சலிப்போமே!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading