சிவரூபன் சர்வேஸ்வரி

நீரழிவு
<<<<<<<<<
வானத்தில் சண்டைகள் ஆரம்பித்தன
வளைந்து நெளிந்து மின்னல் அவள் தாக்கினாள்

இடியோசை காதில் பயங்கரத்தைக் பயங்கரமாய் கொடுத்தது
இளமையான தென்றல்
பேசாது மௌனமாகியது

வென்முகில் கூட்டம் பயந்து ஒதுங்கியது
காரிருளோ பகலையே இரவாக்கிநின்றது
சோவென்ற இரச்சலுடன் மழையோ மண்ணிலே. பரவியது
கொழும்புப்பட்டண சுற்றுக்கிராமம் நீரினால் சீரழிவுவானதே

மிதப்புக்கள் கட்டி மனிதர்பயணங்கள்
உயர்நிலம் நோக்கிமனிதர்கள் பயணம்

நீரின்றி இவ்வுலகு இல்லையாம்

நீரழிவு வந்தாலும் இடமும்இடமுமில்லையே

நீரழிவும் நீர் இழிவும் நிம்மதியை நிலைகுலையவைக்கும்

கட்டுடல் மெலியும் கலையம்சம் குலையும்
மணகுடிசையழியும் மண்சரிவு நிகழும்

நீரழிவும் நீர் இழிவும்
ஒன்றுதானே

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍✍✍✍✍🐍🦀🐚🐚🐚🐚

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading