ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-49
22-10-2024

ஆசான்

ஜாதி இல்லை,
மதமும் இல்லை
யாரென்று
தெரியவுமில்லை.
நிலவரம் புரிந்து
நிலமைகள் தெரிந்து
முன்னோடியாய்
முன்மாதிரியாய்.

பூட்டிய வீட்டுச்
சிறையிலிருந்து
திறமைகளை
வெளிக்கொணர்ந்து
பெற்றோர் போலும்
பெரியோர் போலும்
பெருமிதத்துடன்
பேரறிவு புகட்டி

அறியாமை இருளகற்றி
அறிவொளி ஏற்றி
ஓயாது ஓடோடி
ஊருக்குப் பயன்
விளைக்கும்
பேராறு நீங்களல்லோ
உங்கள் பெருமைக்கு
நிகருண்டோ!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading