ஜெயம் தங்கராஜா

சசிச

பெருச்சாளிகள்

நாட்டையே நாசமாக்கிய ஊழல் பெருச்சாளிகள்
ஆட்டமாய் போட்டார்கள் அரசியல் போலிகள்
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பானவர்கள் அவர்கள்
கொள்ளையடித்தே நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் இவர்கள்

இதுவரை இவரது அட்டகாசமே ஓங்கி
எதுவரை தொடருமோவென குடிமக்களோ ஏங்கி
தம்பி அண்ணன் மகனென திருட்டு
தப்பு இவர்க்கு இல்லையொரு பொருட்டு

பெருச்சாளியாய் வளர்ந்து நாட்டை துளையிட்டவரை
திரும்பியே பார்த்தான் ஒருவன் இம்முறை
மீண்டும் தேசத்தை கட்டியெழுப்பும் எண்ணம்
தோன்றும் மாற்றங்கள் அவனாலே திண்ணம்

பழுவாக இருந்த பீடைகள் அகலட்டுமே
ஒழுங்கான ஆட்சியும் இலங்கையில் மலரட்டுமே
நம்நாடு எனக்கொண்டு செய்திடுவோம் அபிவிருத்தி
எம்மோட உறவுகளுள் காணலாமோ பிறத்தி

ஜெயம்
14-10-2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading