தியாகத்தின் சின்னம்

ரஜனி அன்ரன் (B.A) “ தியாகத்தின் சின்னம் “ 29.05.2025

தன்னலமே இல்லாத உறவு
தன்னம்பிக்கை கொண்ட ஜீவன்
தனக்கென வாழாது எமக்கென வாழ்ந்து
நம்பிக்கையின் வலிமையை
உணர்த்திய உன்னத எந்தை
தியாகத்தின் சின்னமே !

நிழலாகிய நேசம் நேசத்தின் தீரம்
தோழனாய் நின்ற தோழமை
உழைப்பினில் களைப்பின்றி
உழைத்திட்ட உழைப்பாளி
வாழ்வினை அழகாக்கிய
பாசத்தின் உருவம் தந்தையே !

அன்பின் ஆழத்தை மனதினில் புதைத்து
ஆசைக் கனவுகளை நெஞ்சினில் சுமந்து – தான்
எட்டாத உயரத்தை நாம் தொட்டுவிட
எமக்காய் துடித்த ஜீவனை
எட்டமுடியா இடத்திற்கு
அழைத்திட்டானே காலனும் விரைந்து
தியாகத்தின் சின்னத்தைப் பாதி வயதினிலே !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading