நட்பு

ரஜனி அன்ரன் (B.A) “ நட்பு ” 31.07.2025

இணையில்லா உறவு
இதயம் மகிழும் இணைவு
உன்னதஉறவு உணர்வின்பகிர்வு நட்பு
தோல்வியிலும் வெற்றியாகி
துன்பத்திலும் கைகோர்த்து
வேஷங்கள் களைந்து
பாசத்தாலே சேர்த்தணைக்கும்
பரிசுத்தமான பூ நட்பு !

நட்பிற்கு மொழியில்லை எல்லையில்லை
நட்பென்றால் அழகு நட்பென்றால் நல்லுறவு
நட்பென்பது ஒரு வார்த்தையல்ல
நம்மை நம்பும்உறவு நதியெனும் உணர்வு
உதிரத்தில் பிறந்த உறவல்ல
உன்னத வாழ்வியல் பயணத்தில்
உறவாகி வந்த சஞ்சீவி மருந்து !

சிறுசிறு சந்தோசங்களில் குதித்திடும் நிழல்
துக்கமெனும் இரவில் ஒளிதரும்தீபம் நட்பு
முழுமையான வாழ்வியல் புத்தகம்
அழகான சுதந்திரத்தில் மலரும்பூ நட்பே !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading