நினைவுகள் கனக்கின்றன

ராணி சம்பந்தர்

நினைவுகள் கனக்கின்றன
நீந்த முடியா முனவுகின்றன
ஆளுமந்த அரசில் தொடரும்
வரலாற்று இன அழிப்பிலும்
கெடுபிடி விடாப்பிடியிலுமே
மனம் மறவா சுமக்கின்றன

உடல் பிழிந்து உதிரந் தோய
உருக்குலைந்த உடலங்கள்
தசை கிழிந்த மார்பில் பால்
குடித்த பச்சிளம் சிசுக்களும்
கதறக் கதற உதறிக் குதறிய
வான் குண்டுகளின் தீப்-
பிழம்புகளின் தாக்குதல்கள்

மயக்க மருந்து இன்றியும்
விறைப்பு ஊசி அன்றியும்
வயிறு கிழித்து வெளியே
சிசு எடுத்த வேதனையோ
கொடிதிலும் கொடியதன்றோ

அறைகூவலும் அழுகுரலுமே
இன்னுமின்னும் காதில் கேட்க
வன்முறையும் ,வாளும்,கத்தி
வெட்டுக்குத்தும், போதை வெறி
மானபங்கமும் தொடர்கதைச்
சரித்திரம் படைக்குமன்றோ

கார்த்திகை 26 தேசியத் தலைவர்
பிறந்த கொடையும், தாய்
மண்ணிற்காகப் போரிட்டு
தம் உயிர்த் தியாகம் செய்த
மாவீரருக்கும் தீபச் சுடர்
ஏற்றிடுவோம்

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading