நேர்மை

நேவிஸ் பிலிப்(411)

நெஞ்சிலே உறுதி கொண்டு
நேருக்கு நேராய் நிமிர்ந்து நின்று
வாழும் வாழ்விற்கு சிறப்பாகும்
தாழ்நிலை போக்கும்
களங்கம் நீக்கும்
நெஞ்சை நிமிர்த்த
நெம்பு கோலும் தேவையில்லை
வாழ்விற்கு நிம்மதி தரும்
வாடும் நிலையும் போக்கும்
உடலும் உயிரும் இருந்தாலும்
இது இல்லையெனில்
பயனென்று ஏதுமில்லை

சீர் தூக்கிப் பார்ப்போமாயின்
உயிரும் இதுவும் ஒன்றே
வாடி வதங்காது
குனிந்து கும்பிடு போடாது
எதிர்த்து நின்று வாழ்வைவெற்றி கொள்ளும் தீரம்
அதுவே நேர்மை!!!!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading