துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர் குளிரும் கூதலும் குறைந்திடவே பளீரென மனமது நிறைந்திடுதே ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே துள்ளிக் குதிக்குது சந்தோஷம் மெல்லத்...

Continue reading

பட்ட மரம்

செல்வி. நித்தியானந்தன்
பட்ட மரம்

ஊஞ்சல் கட்டி
ஆடியதும்
ஊர் குடையாய்
குந்தவும்
ஊட்டம் கொண்டு
இருந்ததும்
உட்கார இடமும்
தந்ததும்

காற்றின் அசைவில்
வருடலும்
காணது போகவே
நெருடலும்
காண்போர் மனதில்
தேடலும்
காட்சி பொருளாய்
நிற்பதும்

பட்சிகளின் வாழ்வின்
இருப்பு
கிளையுடன் அடர்ந்த
வனப்பு
ஆனந்தமாய் அமர்ந்த
அன்று
பட்டாலும் பயனாய்
இன்று

விறகாய் சேவையில்
நன்று
விந்தையாய் இப்போ
பட்டதே மரமாய்

செல்வி. நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பட்டமரம்... சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு இருப்பிடத்தில் இன்று இயங்காது உறங்கும் முதியோர் காப்பகத்தில் முடங்கியே ...

Continue reading