பாசத்தின் பகிர்வினிலே (712)

செல்வி நித்தியானந்தன்
பாசத்தின் பகிர்வினிலே

காலமும் எமக்காய்
வாழ்ந்து
கண்ணிலே வலிகளை
சுமந்து
கடமைதனை திறம்பட
செய்து
நேர்த்தியும் பலதினை
செய்து
நெஞ்சிலே கனமும்
தாங்கியவர்

பணிகள் பலதும்
செய்து
பசியும் பலமுறை
மறந்து
உணவின் ருசிதனை
துறந்து
மகவுகள் உயர்வு
கண்டு
அகம் மகிழ்வில்
அலையாகி
கரைதனை அடைய
உரமானர்

பாசத்தை சமனாய்
பங்கிட்டு
பங்குவமாய் பலதை
கற்பித்து
பலருக்கும் உதவி
புரிந்திட்டு
புவியிலே பூரிப்பாய்
வாழ்ந்த
அன்னைக்கு பகிரவே
நிகருண்டோ

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading