புதுமுகம்தான் சாதனை

சர்வேஸ்வரி.க

பூர்வீகத்தின் புதுயுகம் ….

இருண்ட தேசத்தில் மருண்ட வாழ்வு ….
வரண்ட அகத்தில்
திரண்ட சோதனை….
பரந்த தேசத்தில் அகதியாக தகுதி…
துறந்த மண்ணில் திறந்த கதவுகள்…

வழிதவறிய பாதை வரைந்த
கோலம்…
அழிவற்ற தாய்மொழியின் தணியாத தாகம்….
தீட்டிய புத்தியில் கூரிய முனைப்பு….
ஈட்டிய அறவழி கூட்டிய கரங்கள்…

நாடலில் மேன்மை நகர்த்தலில் சாதனையாளன்…
ஆக்கிவைத்த திருநாள் “ஆனி பத்து” மலரும் நினைவுகள்…
ஆண்டின் உயர்வு
அகவை இருபத்தேழு….
சொல்லும் செயலும் மாற்றம்
காணா கோர்ப்பு…

எழுதியும் பேசியும் இணைந்தவர்
தொகை மூவாயிர மேலானது….
மீட்டும் நினைவலைகள்
மூழ்கிய சந்தோஷங்கள்…
காட்டும் தினமும்
பாமுகத்தின் ஒளியான கீற்று….
புதுயுகத்தில் சாதனை
வாழும் காலம் பலபல வளங்கள் தேங்கிட
வாழ்ந்திருக்கும்
பாமுகமே வாழீ….வாழீ…..வாழியவே…

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading