“பூத்திட்ட புத்தாண்டிலே”

நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)

அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க

இன்பத்தமிழாலே எளியதொரு கவி எழுதி
துன்பமெல்லாம் அகன்றோட
தூயதோர் யுகம் படைப்போம்

உண்மை அன்பு நீதியென
நாடெல்லாம் நயந்து நிற்க
மென்மை எனும் மாண்பு
தரணியெங்கும் நிறைந்திருக்க

மதங்கள் சிறப்புடனே
மாநிலத்தில் வளர்ந்திருக்க
ஓதுகின்ற ஓசையெல்லாம்
மனிதம் மலர வேண்டுமென்றே

தம் சமயம் பேணி வாழும்
நிலை உலவ வேண்டும்
உண்மையுடன் பிறர் சமயம்
மதித்து நிற்க வேண்டும்

மனித நேயப் பண்பு
மனங்களிலே இலங்க
புனிதமொடு புது வாழ்வை
புத்தாண்டில் தொடங்குவோம்….
நன்றி———

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading