பூமழை தூவும்

பூமழை தூவும்

பூமழை தூவவும் பூக்கும் பூங்கொடிகளும்
பாமழை தூவிப் பரிவும் மேவிடவே
ஞானமழை பொழியும் ஞாலமும் வேண்டுமடி
தாவிரும் மேகமே தூதாகப் போய்வருவாய்

நீரூற்றுப் பிறந்திடவே நீங்கிடும் துன்பமெல்லாம்

வாவிகுளம் நிறைந்து விட்டால் பசுமையுமே
புரட்சியும் தேவையில்லை அயர்ச்சியும் எங்குமில்லை
எழுச்சியாய் வாழ்ந்திடவும் ஏற்றத்தைப் பெற்றிடவும்

காணமயில் ஆட்டத்தைக் கண்டவர்கள் மகிழ்ந்திடுவார்

தேனிசைக் குரலால் கீதமும் பாடிடுவார்
வான்மழை பொழிந்திடவே வையகம் கனிந்திடவே
வைரமணி விளைந்திடவே வசந்தம் வீசிவரும்

களைப்பாறி இருந்திடவே காக்கும் தெய்வமடி
முளையாக வருவதுதான் மரமாக நிற்குமடி
சளையாத புத்தியாலே களமாடி வருவாயே
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading