போட்டியான இசை (622) 31.07.2025

செல்வி நித்தியானந்தன் போட்டியான இசை

மனிதனால் உந்தபட்டு
செவிவழி கேட்கப்பட்டு
இசையாய் ஈர்க்கப்பட்டு
பலருக்கு விருந்தாகும்

சுருதியாய் சுரமாய்
இராகமாய் பெற்றும்
ஓம்காரமாய் ஒலிப்பது
நாதத்தின் இசையாகும்

பிரபஞ்ச மூலமாய்
பிரமனின் தோன்றலாய்
ஆதார சக்தியாய்
அவனிக்கு கிடைத்ததும்

பணத்தாலே ஈர்க்கப்பட்டு
பலநாடுகள் கடத்தப்பட்டு
இசைநிகழ்வு போட்டியிட்டு
இன்றைய நிலையானதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading