மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுபக்கம்

நகுலா சிவநாதன்
மாதரின் மறுபக்கம்

அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின்
காலங்கள் மாறின கடமைகள் மாறினவே
ஞாலத்தில் இன்று இயந்திர வாழ்கையாகின!

புவிதனில் உழைப்பும் பூரிப்பாய் உயர்வும்
பெண்ணின் கைகளில் முயற்சியாய் எழ
வாழ்கையின்மாற்றம் வண்ணமாய் மாறியதே!
எண்ணங்கள் எழில் வண்ணமாய் உயர்ந்தன

மௌனத்தின் மொழியான பெண்கள் இன்று
கணணியின் கைவரிசையில்
உலகத்தின் முன்னணியில்!
உள்ளுர காரியமாற்றும் கன்னித்தேவதைகள்

மாதரின் மாற்றம் எல்லைகளை கிளித்து
வானத்தில் கடலில் மண்ணில் சாதனை
மாற்றம் வந்தது மாட்சிமை கொண்டது
இன்றைய பெண்கள் இமயத்தின் வளர்ச்சியில்

நகுலா சிவநாதன் 1846

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading