ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மாதவமே உந்தனை

நேவஸ் பிலிப் கவி இல(361 28/11/24

ஈழத் தாயவள் பெற்றெடுத்த
தவப் புதல்வர்கள்
மண்மீட்புப் பணியில்
களமிறங்கி போராடிய
மறவர்கள்

வன்முறைக் கூட்டம
வளம் கொழிக்கும்
தாய் மண்ணை
சிதைத்தொழிக்க

இன வாதக் கொடுமை
நாட்டினில் பெருகிடவே
நேருக்கு நேராய் நின்றீர்
போருக்கஞ்சா வீர்ராய்

நீதியும் தர்மமும் நிலை தாழ்ந்து
வீழ்தல்கண்டு
நீரும் நெருப்பும் துச்சமென
கடலோடு போராடி ,சோராத மனதோடு
வேரோடு வீழ்கின்றவிதி வந்த போதினிலும்
எரிகின்ற தணலூடே களமாடினீர்

ஊரும் பெயரும் அறியவில்லை -நீங்கள்
சீரோடு போராடிய திறமறிந்தோம்
உங்கள் தியாகத்தின் சிறப்பறிந்தோம்

மாண்டும் மடியாது எம்மை
ஆட்கொண்ட “மாதவமே உந்தனை”
எம் சிந்தையில் கொண்டு
தீபங்களேற்றி
வந்தனை செய்கின்றோம்
என்றும் புகழ் கொண்டீர்
எம் தலை சாய்ந்த வீர வணக்கமேற்பீர்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading