ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மாதவமே உன்றன்!

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரத்தில் இணைந்து கொள்பவள் ஜேர்மனியிலிருந்து சக்தி சிறினிசங்கர்

மாதவமே உன்றன்
*********************
புகழ் பாடி பூச்சூடி வணங்குகின்றோம்
அகம் இருத்திஅஞ்சலிக்கின்றோம்
வெகுதூரம் வந்துவிட்டோம்
வெந்துதான் போகின்றோம்
உங்கள் நினைவில்!
பலம் என்ற திடம் பயம் அறியாப் பருவம்
நிலம் ஒன்று வேணும் நிமிர்ந்தெழுந்து நின்றீர்கள்
புலம் வந்து புலம்புகின்றோம்
காற்றோடு சங்கமமாகி
ஊற்றாக உணர்வோடு
உறைகின்றீர்கள்!
உன்றனைப் பெற்ற
அன்னையும் என்ன தவம் செய்தாளோ!
தந்தை மகற்காற்றும் உதவி
மைந்தரே நீவிர் செய்தீரோ
முந்தி இருக்கின்றீர் முழுவுலகும்
ரம்மியமாய் ரசித்து மகிழும் இளமைக் காலம்
எம்மினத்துக்காய் உயிர் துறந்த எம் மாவீரரே
இன்தமிழ் நல்வாழ்வுக்காய் தந்துயிரை நிலையானீர் எம்மனத்தை விட்டகலா மாவீரரே!
தமிழைத் தாய்ப்பாலெனச் சுவைத்தீரோ
சிமிழாய் எரிகின்றீன்றீர் சித்திரமாய் விளங்குகின்றீர்!
தொன்மைகொள் தமிழின் தங்கக் குழந்தைகளே
சாவில்லையுமக்கு சரித்திரங்கள் நீங்களன்றோ
பூவிலே மாலைகள் போற்றிடும் தீபங்கள்
உங்களைத் தாலாட்டும்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading