மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்…….

ரஜனி அன்ரன் (B.A) ” மாற்றத்தின் ஒளியாய் ” 15.01.2026

மார்கழிப் பனியின் திரைவிலக்கி
மானிட வாழ்வினை வனப்பாக்க
மங்கலமாய் வந்துவிட்டாள் தைப்பாவை
இருண்ட வாழ்வினில் உழன்றமானிடம்
ஒளியின் திசையில் தடம்பதிக்க
ஒளிமயமான வாழ்வுசிறக்க
மாற்றத்தின் ஒளியாய் மலர்ந்துவிட்டாள் தைப்பாவை !

விண்ணில் ஒளிரும் செங்கதிர்வீச்சில்
மண்ணில் மலர்ந்தது தைத்திருநாள்
இனிக்கும் மாற்றத்தின் தொடக்கமிது
மனதினில் தேக்கிய கவலைகள் ஒழிய
மாற்றத்தின் ஒளியாய் உதித்திடும் விடியல்
மாந்தர் வாழ்வில் மங்கலம் பொங்கட்டும்
பொங்கு தமிழாகப் பொங்கி வழியட்டும் !

சுழலும் உலகில் மாற்றமே வாழ்க்கை
உழலும் வாழ்வில் உயர்வே வெற்றி
மாற்றத்தின் ஒளியாய் மலரட்டும் வாழ்வு !