மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மாற்றம்

ரஜனி அன்ரன்

“ மாற்றம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.09.2024

மாறும் உலகின் விதியில்
மறைந்த விடியலின் கனவில்
மறந்து போகும் கணத்தில்
மாற்றமும் மலருதே நொடியில்
மாற்றமென்பது உலகியல் நியதி
மாற்றமென்பது வளர்ச்சியின் அடையாளம் !

நீரின் ஓட்டம் மாறினாலும்
நிலாவின் ஒளிகூட சுருங்கினாலும்
மாறிக் கொண்டேயிருக்கும் மாற்றங்கள்
முடிவற்ற பாதை தனில்
முடிவடையும் கனவுகூட மாறிடும்
வாழ்க்கைப் பயணமதில்
மாற்றங்கள் திருப்பங்களாகிட
ஏமாற்றங்கள் மனதைக் காயமாக்குமே !

மலரும் பூவின் வாட்டம் போல்
மறந்து போகுமே கடந்தகாலமும்
மாறியது நேற்றைய நாளும்
மாறுமே நாளைய வேளையும்
நிமிசம் மாறும் வருசம் மாறும்
நமக்கும் மாற்றம் நிட்சயமே
காலத்தின் வலிகளை மறக்க
வாழ்வில் ஏற்றம்காண வேண்டுமே மாற்றம் !

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading