“மிச்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல (480)

இரவின் விழிப்பினிலே
இரை தேடிக் களைத்து
இருப்பிடம் நாடும் உ யிரினங்கள்
இன்பமாய் இரவைக் கழிக்க

இன்றைய தேடலுக்காய்
அலைந்து திரியும் மனிதர்க்கு
முழுமை பெற்றதான மகிழ்வு
முகத்தில் தெரிவதில்லை

மனதில் நிறைவில்லையாயினும்
வயிற்றுக்கு உணவீந்து
நிம்மதியற்ற மனதுடனே
அரை குறை உறக்கத்தில் புரள்கின்றான்

கொஞ்சம் ஒய்வு ,புது வேகம்
பெரும் நம்பிக்கை
மீண்டும் தேலுக்காய்
அதி காலையில் புறப்பாடு

பாவம் மனிதன்
ஏனோ அவனுக்குப் புரிவதில்லை
இப் பிரபஞ்சத்தில் எத்தனை
பொக்கிசங்கள்

ஆழமாய் நோக்கிடின்
தெரிந்திடும் மிச்சமிருக்கும்
இரகசியங்கள் .
நன்றி,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading