முதல் ஒலி

நகுலா சிவநாதன்
முதல் ஒலி

கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின் நல்லொலி ஆனாய்
நயமாய் கண்ட சண்ரைசின் குரலொலியே

37 வருட முதல் ஒலிநீ பரப்பி
முனைப்பாய் ஒளிர்ந்தாய் முன்னின்று
வனப்பாய் வாழ்வியல் சொல்லி வளர்ந்தாய்
வண்ணமுடன் எண்ண அலை விரித்தாய்

தங்கத்தமிழை சிரமேல் வைத்து
பங்கம் இல்லாப் பாரிலே பவனி வந்தாய்
நெஞ்சத்தில் நிறைந்த ஒலிநீயே
நேரிய கருத்துகள் விதைத்தாய் வாழி! வாழி

ஐரோப்பா கண்ட வண்ணமிகு ஒலி
வரலாறாய் ஆனதே தேன்தமிழாலே
நடா மோகன் குரலிங்கு நயமாய் ஒலிக்க
விடாமல் தொடர்கிறதே
விண்ணொலியாய் என்றும்

நகுலா சிவநாதன் 1829

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading