” முதல் ஒலி “

ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025

ஒற்றை மனிதனின் முனைப்பில் ஓயாத உழைப்பில்
மாற்றான் தேசமதில் மாற்றமின்றியே
வெற்றிக்கனியாக கிடைத்தது முதல்ஒலி
காற்றோடு காற்றாக தேம்ஸ்நதிக் காற்றோடு
தேசமெல்லாம் வீசியது தமிழ்மணம்
முத்துவிழாவினையும் முனைப்போடு தாண்டி
முத்தாப்பாய் ஒலிக்குது இன்றும் முதல்ஒலி !

தடைகள் பலதையும் உடைத்து
இடர்கள் பலதும் தாங்கி
உறவுகளின் இணைப்புப் பாலமாகி
தங்கு தடையின்றி ஒலிக்குது
தங்கத்தமிழுக்கு செழுமையைச் சேர்க்குது !

செய்திப் பரிமாற்றம் கருத்துப்பகிர்வு
சுடச்சுடச்செய்திகள் இணையவளச் செய்திகளென
உலக நடப்புக்களை ஒற்றை நொடியில் தந்து
இணையில்லாச் சேவைதனை
இனிதே செய்திடும் சூரியோதயமே நீடுவாழி நீ !

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading