முதல் ஒலி 76

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-11-2025

ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே
அகிலமெங்கும் அலை ஓசை
உலகமெங்கும் கலைஞரை வளர்த்து
ஊக்கமதை நோக்காய் கொடுத்து

பாக்கள் இயற்ற திறமை புனைந்து
பாரெல்லாம் போற்றும் முதல் ஒலியே.
தனிமையை அகற்றி எம்மிடையே
தாயாய் அறிவுரை புகட்டுவீரே

எட்டுத்திக்கும் உறவுகள் பெருகி
எண்ணற்ற பொது அறிவு புகட்டி
பூட்டியவீட்டில் பெண் வளர்ச்சி காட்டி
ஊட்டிய வானொலி முதல் ஒலியே!

முதல் ஒலி அதிபரும், பாரியரும்
முன்னூறாயிரம் உறவுகள் கடந்தும்
மனதால் நன்றி அனைவர் பணிக்கும்
முதல் ஒலி….மேலும் வாழ்க வளர்க.🙏

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading