வசந்தா ஜெகதீசன்

திசைகாட்டிகள்...

திசைகாட்டிகள்…
கல்விக்குச் சான்றாகி
கலங்கரையாய் வழிகாட்டி
பள்ளியிலே அறிவூட்டும்
பாசமிகு ஆசான்கள்
பகுத்தறிவின் வித்தகர்கள்
அகரத்தின் கரம்பற்றி
அகலொளியாய் தீபமேற்றி
திசையெங்கும் ஒளிருகின்ற
தொழில்த்துறையில் துலங்குகின்ற
சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள்
முதலாய்
சரித்திரநாயகர்கள் பலதாய்
உருவாக்கும் உளி முனையில்
ஆசிரியம் முதன்மை
ஆசான்கள் கற்றறிவே கல்வித் தகமை
கசடறமொழிதல் வழி கட்டியத்தைக் கூறி
திசைகாட்டும் பல்திறனில் மாணவரைப் பேணி
துலங்கவைக்கும் தூரிகைகள்
எத்தனையோ பேர்கள்
திசைகாட்டி தேர்வாக்கி வளமூட்டும் சேவை
நிலையாக்கி நிமிர்வாக்கி
தேசவளமாக்கும்
பேறுகொள் தகமையில் பெருவரமே கல்வி
ஆசான்கள் பணிகளுக்கு தலைசாய்த்தே நன்றி
உலகநிலை உயர்விலே
உன்னதமே வாழி!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading