வசந்தா ஜெகதீசன்

உதிர்கின்ற இலைகளே...

உதிர்கின்ற இலைகளே…
உங்களின் வாழ்வு எம்மையும் சாரும்
உருவில் பருவம் ஒற்றுமையாகவும்
தருவின் பருவம் தளிரில் தொடங்கும்
பருவ முதிர்ச்சி பலவகையாகும்
நான்வகைக் கூறில் இலைகளின் இருப்பிடம்
ஒற்றுமை எமக்கும் இதுபோல் தோற்றம்
இளமை வனப்பில் ஏற்ற முனைப்பு
எதுவும் முடியும் என்ற துடிப்பு
படிப்படியாகும் பருவமாற்றம்
பலபடி உயர்வில் முதிர்ச்சி முட்டும்
சருகாய் இலைகள் சந்தியில் வீழும்
உதிரும் இலைபோல் நம்நிலை மாறும்
உடலும் உளமும் தளர்வில் சோரும்
உபாதை பலவாய் உருவில் சேரும்
உதிர்கின்ற இலைபோல் உயிர்களின் வாழ்வு
ஒற்றுமை பயணமாய் ஒன்றுமே இலக்கு!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

Continue reading