ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வரமானதோ வயோதிபம்

ராணி சம்பந்தர்

ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே சாதனை படைத்ததில்
துறக்கவே முடியாத ஞாபகமே

எந்நேரமும் மகிழ்வுப் பொழுதே
உற்சாக ஊக்கமும் உழுதிடவே
பயமின்றிப் பெலம் கரமிணைய
நல் விளைச்சல் பலன் தந்ததே

விதிவசத்தால் பாரமான முதுமை
உரு மாறியதில் பெருமூச்சானது
கடித்துச் சுவைக்கப் பல் மறுக்க
கண்ணிருந்தும் பார்வை மங்கிட
தசை எலும்புகள் நலிவடைந்திட

தீராத வலி பெருகிய கண்ணீரில்
திருகிய வாலிபப் பருவம் மெருகிட
மானிடர் வரமானதோ வயோதிபம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading