ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம்

தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும்
அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம்
புயலின் நடுவே சிக்கியே மிதப்பு
கடலிலும் மூழ்காது கரையுமேறாது தவிப்பு

இரண்டாம் குழந்தைப் பருவமென்பது உண்மை
மூன்று கால்களிலே நகருகின்ற தன்மை
உடலை நோகவைக்கும் விடுபடாப் பிணியும்
பயந்தே கால்பதிக்கும் மரணத்திற்கான பயணம்

அடுத்தடுத்து அவயவங்கள் வசீகரத்தை கொன்றுவிடும்
வாயோதிபத்தில் மூளையின் திறனும் குண்றிவிடும்
அதிகபட்சமாக மற்றவர்களில் சார்ந்திருக்கும் சூழ்நிலை
கர்ம பலன் விதிப்பயனென வாழ்நிலை

முதிர்ச்சி அடைந்த கல்லென்றால் சிலையாகும்
முதிர்ந்த கனிகள் சுவையென விலையாகும்
முதிர்ந்த நெல்மணிகளின் அரிசி உலையாகும்
முதுமை மானிடர்க்கு சாபத்தின் நிலையாகும்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading