வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026

செல்வி நித்தியானந்தன் வரமாகும் வாய்ப்புகளே இயற்கையின் கொடையில் வளமான வாய்ப்புகள் இறைவனின் படைப்பில் பிறப்புஇறப்பு நியதிகள் வாழ்வு என்பதும் வரமான...

Continue reading

“வரமான வாய்ப்புகளே”

நேவிஸ் பிலிப் கவி இல (570)

வரமாய் கிடைத்த வாழ்வினை நாம்
வளமாய் வாழ்ந்திடவே
காற்றுள்ள போதே தூற்றிடணும்
வாய்ப்புள்ள போதே கற்றிடணும்

கிட்டி வரும் வாய்ப்பனைத்தும்
பயணத்தின் பாதைகளாய்
எடுத்து வைக்கும் அடிகளெல்லாம்
சிகரம் தொடும் படிக்கல்லாய்

வரமான வாய்ப்புகளாய்
பாமுகத்தின் வாசல் எமக்காய்
தினமும் திறந்திருக்கும்
காசு பணம் தேவையில்லை
முன் பதிவு ஏதுமில்லை
வாய்ப்புகள் பலவுண்டு
எல்லோர்க்கும் இடமுண்டு

ஆன்மீக நெறியுண்டு
ஆங்கிலப் பாடமுண்டு
ஆர்வம் அறிவு திறமையென
முயற்சிகள் பலவுண்டு
யோகா பயிற்சியுமுண்டு

வயதெல்லை இங்கில்லை
அன்புக்கும் பஞ்சமில்லை
உறவுகளாய் ஒன்றிணைத்து எம்மை
அணைக்கும் கரங்கள் நான்குண்டு

ஒருமுறைதான் வாய்ப்புகள் நம்
வாசல் கதவு தட்டும்
வரமாய் வந்ததை நாம்
பலமாய் பற்றிக் கொள்வோம்
நெஞ்சம் நிறை நன்றியோடு………..
நன்றி………….

Author:

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading