தமிழ்ப்பள்ளி…

வசந்தா ஜெகதீசன்
வரலாறு பலபாகம்
வழிகூறும் பலகாலம்
தமிழ்ப்பள்ளி உருவாக்கம்
தரணிக்கே தனிமகுடம்
உறவுகள் ஓன்றாகும்
உயிர்ப்பு மொழி தமிழாகும்
அடுத்த தலைமுறையும் அணிசேர வாய்ப்பாகும்
விழாக்களும் விழுமியமும் நிகழ்வாகி நிமிருமே!
கலைகள் பல கற்கும் கூடம்
தமிழ்ப்பள்ளி இதன் சாரம்
ஆன்றோரும் சான்றோரும் அணிசேர உருவாகி நிலமும் புலமும் இணைவாக வழிகூறும்
இலக்கிலே தமிழ் வாழும்
தமிழ்ப்பள்ளி உயிர்ப்பாகுமே!
நாளைய தலைமுறையும் நம்மினத்து முகவரியும் சாலவும் சிறப்புற சரித்திரம் பொறித்துயரும் தமிழ்ப்பள்ளி ஓர் ஆலயமே!
தகுந்த வழிகாட்டி தலைமுறை ஓன்றிணைக்கும்
பள்ளியின் பலசேவை பாருக்கு பெருங்கொடையே பயனாகி பாரெங்கும்தமிழ்வாழிநன்றி

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading