விரல் நுனி அறிவியல்

சிவதர்சனி இராகவன்

விரல் நுனியில் அறிவியல்…!

வியாழன் கவி 2012!

ஆற்றங்கரை ஓரங்களில்
ஆழமாய் வளர்ந்த நாகரீகம்
அளித்த வளங்களில் ஒன்றே
எழிச்சியாய் வளர்ந்த அறிவியல்
மானிடத் தேடலும் முயற்சியும்
மண்ணில் எத்தனை கண்டுபிடிப்பு..

மகத்தான சாதனை யாவுமாய்
மரணத்தையும் தாண்டி வாழுதே
அண்டவெளி தொடக்கம் அதல்
பாதாளம் வரைக்கும் தொடர
விந்தை மிகு விஞ்ஞானமும்
அசுர வளர்ச்சி கொண்டதே..

உள்ளங்கை உரசலில் பொறி
அள்ளித் தருமே எத்தனை வசதி
இருக்கும் இடத்தில் நகராதே
இணைக்கும் இணையமும் நமை
கற்றல் படைத்தல் விற்றல் விருது
பற்பல ஆளுமை விரல் நுனிக்குள்..

பிறந்திடும் குழந்தையும் சாதிக்கும்
இறப்பின் பின்னும் போதிக்கும்
காலத்தின் கால்களின் சுழற்சியே
நன்மையும் தீமையுமாய் கலக்குது
நாளைய உலகின் நிலையும் இது
கோழையல்ல அறிவியல் விரல் நுனி..!
சிவதர்சனி இராகவன்
25/7/2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading