வீடு

ஜெயம்

கடல் காட்டை சுமந்திடும் பூமி
உடல் கூட்டையும் தாங்கிடும் சாமி
பாறைகள் மலைகள் அருவிகள் ஊற்று
சோறையும் நீரையும் தந்திடும் சேர்த்து

சீராட்டி வளர்ப்பதில் இன்னோர் அன்னை
வாழ்த்தியே வணங்கிடுவோம் வாழுகின்ற மண்ணை
பிரபஞ்சத்தில் அனைவருக்குமான ஒரேயொரு வீடு
வரவாக்கி வளங்களெல்லாம் அடைந்துகொண்டோமே பேறு

இயற்கையின் எழிலை அணிந்துகொண்ட கோலம்
பயன்களை மடிதாங்கி சுழன்றிடும் கோளம்
அகழ்வாரையும் தாங்கிடும் அதிசய நிலம்
நிகழ்கால வெற்றியின் ஆட்டத்தின் களம்

பேராசை பிடித்தவரால் சிதையலாமோ கிரகம்
பாராது விளைவுகளை ஆக்குகின்றார் நரகம்
மானிட இனத்திற்கே கடமையொன்று உண்டு
மாநிலத்தைக் காப்பதே அதுவாக இன்று

26-10-2025

Author:

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading