வெள்ளப்பெருக்கு 1

ஜெயம்

இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம் அடித்து வாழ்க்கையை சாய்க்கின்றது
கண நேரத்தில் இராணுவம் ஆக்கிரமித்ததுபோல்

தெருக்கள் அனைத்தும் பெயர்களை இழந்தன
நீரின் ஆட்சிக்கு உட்பட்டன வீடுகள்
வெள்ளம் கதவுகளை தள்ளி நுழைகின்றபோது
எத்தனை கடவுளின் பெயர்கள் ஒலிக்கின்றன

அழகான இயற்கை பச்சை காவியம்
அது கோபித்தால் சீர்க்குலயும் மானுடம்
கருணை இல்லாத அந்த கொந்தளிப்பு
வேர்களை குலுக்கி அடியோடு சாய்த்துவிடும்

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading