மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

21.11.24 ஆக்கம் 339 தந்திர தாண்டவம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.11.24
ஆக்கம் 339
தந்திர தாண்டவம்

தந்திரம் தொடர்கிறது
மந்திரம் பாடுகிறது
சிந்தனையில் உயர்
கல்வி குழப்பிட
சிங்கொங் அடிக்கல்
நாட்டுகிறது

முந்திய அரசு முகத்துதி
பாடி அடிக்கடி கூடிக் குழாவிக்
கடன் வாங்கி
வாங்கி கடல் விற்றது

எந்த சிங்களமும் எதிர்த்து நிற்காது
போகவே 99 வருஷக்
குத்தகை முத்திரை
குற்றியது

அந்தப் பாசத்தில்
யாழ், மட்டக்களப்பு
சொந்தமாக்க கடன்
தந்திட சங்கு ஊதுகிறது

மொத்தமாக இலங்கை
அபகரித்திட மீண்டும்
தந்திர தாண்டவம்
சீனா ஆடுகிறதே.

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading