சிவா சிவதர்சன்

[ வாரம் 282 ]

“பெருச்சாளி”

எலிகளில் பெருச்சாளி என்றொரு வகையுண்டு
அதற்கென்றே தனியான பிறவிக்குணமுண்டு
பெருச்சாளி புகுந்த வயலில் நெற்கதிர் இருக்காது
கட்டாக்காலி மேய்ந்தவயலில் வைக்கோல் இருக்காது

கமக்காரன் அறியா களஞ்சியம் பெருச்சாளி வளை
மனிதபதுக்கலில் பெருச்சாளி உண்டென உரை
பண்டங்கள் சேவைகள் நாட்டில் அடிக்கடி பற்றாக்குறை
செயற்கையான தட்டுப்பாட்டால் பெருச்சாளி தடைமுறை

கடந்தகால ஆட்சியில் பெருச்சாளி உருவெடுத்தது
அண்மையில் அம்பலமான உண்மைக்கதை
பல்லாயிரம்கோடி பணஞ்சுருட்டியதால் சட்டநடவடிக்கை
மடியில் கனமில்லையேல் ஏன் தப்பி ஓடும் நிலை?

வரும் பாரளுமன்றத்தேர்தலில் பெருச்சாளிகளுக்குத்தடை
லஞ்சம்,ஊழல் ,அதிகார தூஷ்பிரயோகம் இல்லையெனில்
பஞ்சம், பசி, நாதியற்ற நிலை மக்களுக்கேது?
பெருச்சாளிகளை ஒழித்து நெறிமுறை ஆட்சி அமைப்போம்!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading