வசந்தா ஜெகதீசன்

தரணியின் தாலாட்டு...

தரணியின் தாலாட்டு…
நெறிகளின் ஒழுங்கில் நிமிர்விடுமே
நேர்த்தியின் வாழ்வாய் கிளைவிடுமே
அழகியல் உலகே அரும் வரம்
அவரவர் வாழ்வின் பெரும் நிலம்

ஐம்பூத அசைவின் ஐக்கியம்
ஆளும் ஆற்றலின் அவதாரம்
ஈகை நிறைந்த மனிதமும்
இலக்கு நிறைந்த வேட்கையும்
தரணி தருகின்ற தைரியம்
தன்னம்பிக்கை உலகின் பெரும்பலம்

வரமென உலகில் பலகொடை
வாழ்வின் வெற்றிக்கு அருங்கொடை
இயற்கையின் நியதியில் இரவுபகல்
இயல்பிலே தரணியின் தாலாட்டு
இடரையும் மகிழ்வையும் இணைவாக்கும்
வலிகளை நீக்கவும் வழியாக்கும்

தரணியின் தாலாட்டில் நம் வாழ்வு
தக்கதோர் தைரிய தலைநிமிர்வு
பக்கங்கள் பலதை நிரப்பி நிற்கும்
பாதையின் சுவடுகள் பலகூறே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading