“இயற்கை வரமே இதுவும் கொடையே”

வியாழன் கவி -2225
“இயற்கை வரமே
இதுவும் கொடையே”

வானம் பூமி காற்று நீரு
வண்ணம் எண்ணம் பாரு
தருவும் செடியிம் கொடியும்
தருதல் நன்றாம் பயனே
வரமாய் இறைவன் தந்தான்
வழிகள் உண்டாம் வாழ
விழிகள் போலக் காக்க
விடியல் நமக்காய் ஆகும்…!!

காயும் கனியும் நல்ல
கண்ணைக் கவரும் பூவும்
சோலை தென்றல் ஆறு
வேறும் தேவை ஏதோ ஈங்கு
பறவை மிருகம் மாந்தர்
இயற்கை விரும்பும் நாளும்
புல்லும் செடியும் கொடியும்
பூவுலகு அழகின் பேறு பாரும்..!!

தாந்தோன்றி தானே இயற்கை
தங்கம் போலும் பயன் தானே!!
சிவதர்சனி இராகவன்
16/10/2025

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading