அந்தி நேரம்

ராணி சம்பந்தர்

அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு என்ன பிடிக்கும்?
என்றது கோடி நட்சத்திரத்தில் ஒன்று

எனக்கு கண் சிமிட்டி வரும் உன்னையும்
என்னைத் துரத்தி வரும் நிலவு அழகுத்
தேவதையையும் நன்றாக இனிதாகவே
முழுதாகப் பிடிக்கும் பிடிக்கும் என்றதே

கனக்கும் என் இதயம் அன்னையின்
அரவணைப்புப் போல ஒளிக்கற்றை
என்னும் அன்புக் கரமோடு இவற்றை
அணைக்கத் துடி துடித்துக் கொண்டு
இருக்கும் பொழுதே அந்தி நேரம் .

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading