இயற்கை வரமே இதுவும் கொடையை…

கவிதை: 24
விண்ணவன் – குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை….
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல
வேலைகள் மனிதனால் செய்யப்படினுமே

எவ்வித எதிர்பார்ப்புமின்றி
மனிதனின் வாழ்க்கைக்காக
பணியாற்றி வருகிறதே
இவ் இயற்கை

யுகங்கள் இத்தனை கடந்துமே
தன் பணியில்
எவ்வித குறையுமின்றியே
அன்று முதல் இன்றுவரை பணியாற்றி வருகிறதே

நாமோ இயற்கையை
நம் சுய நலத்திற்காக
அழிக்கிறோம்

ஆனால் இயற்கையோ நம்மேல்
எவ்வித கோபமும்
கொள்ளாது நம்மை
இன்றைவரையுமே
பாதுகாத்து வருகிறதே

இவ் இயற்கைக்கு
என்றும் கடன் பட்டவர்களாய் வாழ்வோமே…
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading