நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

எண்ணங்கள் கலைந்தன

எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன ஏற்றமும் தொலைந்தன

திண்ணங்கள் கரைந்தன தீர்வுகள் தெரியாமல்

வண்ணக் கனவுகளின் வரமுறையும் வழிதவறின

இன்னும் நினைவுகள் இத்தரையில் கீதமாகின

முன்னம் எடுத்த பிறவியின் பலனோ

இன்றும் தொடரும் தலைவிதி என்பதா

என்று தணியுமோ எமது தாகம்

நின்றே பார்ப்போம் நிம்மதி கூடவும்

கண்ணின் மணியில் ஒளியில்லை என்றால்

பார்வையில் மாற்றம் எப்படி அமையுமோ

கனக்கும் இதயம் கேட்கும் கேள்வி

சுணக்கம் கொண்ட இயற்கையின் நியதி

வணக்கம் சொல்லி விடைபெறும் போதிலே

இதுவும் கடக்கும் எதுவும் நடக்கும்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

Continue reading