மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

நகுலா சிவநாதன்
மாற்றத்தின் ஒளியாய்

மாற்றத்தின் ஒளியாய் மண்ணின் விடியல்
மலர்கின்ற இன்நாள் வாழ்வின் பொன்னாள்
மாண்புறும் மக்களின் வாழ்க்கை ஓங்கிட
தேங்கிய இடர்கள் நீக்கட்டும் என்றும்

பூமியிலே புதுவிடியல் பூக்கட்டும் என்றும்
சாமிதான் அதற்கு வரம்தந்து அருளட்டும்
தைமாதம் தளிர்கட்டும் தங்குதடை அகலட்டும்
எங்கும் புதுமணம் பரவட்டும்
ஏற்றங்கள் சீராக பெருகட்டும்

தைமகள் வருகிறாள் தரணியில் பூக்கிறாள்
மெய்தனில் ஞானம் கல்வி ஓங்கட்டும்
செய்யும் காரியம் திறம்பட
செல்லும் இடங்களிள் நெல்லும் விளையட்டும்

நகுலா சிவநாதன் 1837

Author: